AD (728x60)

Saturday 20 September 2014

லோகோ

Share & Comment


பொதுவாவே நம்ம ஊரு ஆட்களுக்கு லோகோக்கள் பற்றிய புரிதல், அறிதல் சுத்தமா இருக்குறதில்லை! அல்லது குழப்பிவிடுவதற்கேற்ப மிகைப்படுத்தப்பட்ட புரிதல், அறிதல் காணப்படுகிறது!! பிராண்ட் லோகோக்கள் என்பவை அவ்வளவு சிக்கலான சமாச்சாரங்கள் அல்ல!!

ஒரு நல்ல லோகோ வடிவம் எட்டு முக்கியமான விஷயங்களைக் கடந்து வருதல் அவசியம்! அவை :

1. SIMPLE
லோகோ ரொம்ப காம்ப்ளக்ஸா இருக்கணும்னு அவசியமில்ல! அது காம்ப்ளக்ஸா இருக்கணும்னு நினைக்கிறது அபத்தம்!! சிம்பிளா இருப்பதே சாலத் தகும்.
2. MEMORABLE / Brand Identity
கலர்களின் மூலமோ ஆப்ஜக்ட் மூலமோ நச்சினு மனசுல பதியும்படி / அந்த பிராண்ட் பதியும்படியாக அமைவது முக்கியம்.
3.DESCRIBABLE
அந்த வடிவம் பொருள் நிறைந்த விளக்கத்தக்க வடிவமாக இருப்பது லோகோவிற்கு கூடுதல் மதிப்பைச் சேர்க்கும்.
4. SCALABLE
அந்த குறிப்பிட்ட வடிவத்தை அதிகபட்ச சுருக்கும் அல்லது விரியும் எந்தவித resizable கட்டத்திற்கு உட்படுத்தினாலும் அதன் காட்சித்தன்மை சிதையாமல் இருப்பது அவசியம். அதற்குத் தகுந்தாற்போல வடிவத்தை முன்னெடுப்பது / அமைப்பது சிறப்பு.
5.VERSATILE
எந்தவித வண்ண மாற்றத்திற்கும் (பிளாக் அன்ட் வொய்ட், கிரே ஸ்கேல் etc..) அளவு மாற்றத்திற்கும், அதிகபட்சம் எத்தகைய பேக்கிரவுண்ட் பின்புலத்திலும் சிறப்பாக இயங்கும் வண்ணம் இருத்தல்வேண்டும்.
6. RELEVANT
லோகோ என்பது அந்த பிராண்ட்டின் துறை சார்ந்த அந்த பிராண்ட் / பிசினஸ் சார்ந்த விஷயங்களை உள்ளார்ந்த அர்த்தமாகக் கொள்வது!
7. RESEARCH
ஒரு பிராண்ட் லோகோ வடிவமைக்கும் போது அது என்ன நிறுவனம், என்ன துறை, என்ன பிரிவு அதன் பின்புலம், அதன் அமைப்புகள், பிராண்ட் சார்ந்த அந்த புராடக்ட் சார்ந்த விஷயங்கள், வட்டார உலகளவில் அந்த துறை சார்ந்த நிறுவனங்களின் தகவல்கள் அவற்றின் லோகோ வடிவங்கள், இன்ஸ்பிரேஷன்கள் இப்படி ஒரு குட்டி ஆய்வையே முடிக்கிவிட்டு முடித்துவிட்டுத்தான் பென்சிலையே தொடணும்!
8. CREATIVITY
மேற்சொன்ன எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய கலைநயம் கொண்ட வடிவம் கிரியேடிவ்வாக இருக்கும்!!
இந்த விஷயங்களை ஒரு டிசைனர் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் இன்னைக்கோ நாளைக்கோ லோகோ தேவைப்படக்கூடிய உங்களைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஏனெனில் காசு கொடுக்கும் கிளைன்ட்டாகப்பட்டவர் என்ன சொன்னாலும் செய்வது டிசைனர் வேலை எனவே கிளைன்ட் சொன்னா மேற்சொன்ன எட்டு விஷயங்களும் சுக்கா ஒடஞ்சி போயிடும்! எனவேதான் நுகர்வோராகப்பட்ட நீங்களோ உங்க நண்பரோ தமக்கான சரியான பொருள் (லோகோ) எது, அது எப்படி இருக்கணும் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த பதிவு!! உண்மைய சொல்லணும்னா நீங்க இத தெரிஞ்சிகிட்டா டிசைனருக்கு வேல சுலபமா போயிடும்!! ஏன்னா நீங்களே இதற்குத் தகுந்தாற்போல தான உங்க தேவையா சொல்லுவிங்க!! இவ்வாறு தரமான லோகோ வடிவம் நம்ம கையில கிடைக்கும்!!

credits to tamillogos
Tags:

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

Popular Content

Recent Posts

Who am I?

I'm a 27 years old Freelance Graphic Designer from Tamilnadu (India) currently based in KSA. I love everything that has to do with Web design & Graphic design, Packaging, Industrial design and I feel more passion about Logo Design. I have 5 years of experience working as a Graphic Designer and also working as freelancer, but and I’m ready for visiting other countries & work for any designing Industry. I love working with people, specially if they have the same passion I have for what they do. Why don't we work together? Go futher down to see why I am the man you need to hire!
Copyright © AR Studioz | Designed by Templateism.com